கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் படுக்கைகளுக்காக காத்திருப்போருக்காக அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
வியாசை தோழர்கள் என்ற அமைப்பினர் மற்றும் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திய ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ளனர்.
5 ஆக்சிஜன் ஆட்டோக்கள் மற்றும் 3 சாதாரண ஆட்டோக்கள் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் இருந்து இலவசமாக மருத்துவமனை அழைத்துச்செல்கின்றனர்.
ஆக்சிஜன் கிடைக்கும் வரை காத்திருந்து மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர்.
24 மணி நேர இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை பெற பிரத்யேக செல்போன் எண்களையும் இந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழலில் மாணவர்கள் உருவாக்கியுள்ள ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.