மதுரை மத்திய சிறைச்சாலையில் அதிகாரிகள் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளிடம் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 2மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

மதுரை மத்திய சிறைச்சாலையில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கஞ்சா, சிகரெட், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட சொகுசு பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மத்திய சிறைச்சாலையில் மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் மற்றும் மாநகர காவல் உதவி ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதல் பெண் கைதிகள் அறை உட்பட 1300க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள், உணவு கூடங்கள், சிறை வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version