கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பதுக்கி விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
தமிழக அரசு மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்கவும் தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் பகுதி கடைகளில் திடீர் சோதனைகளில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்ததுடன் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.