ஒருநாள் தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி வியூகம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில், ஆஸ்திரேலிய அணி திடீரென 2 மாற்றங்களை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெற உள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சம நிலை வகிக்கின்றன.

இந்நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் திடீரென இரு மாற்றங்களை அந்த அணி மேற்கொண்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரென்டாஃப் (Jason behrendorff) காயம் காரணமாக விலகியுள்ளார். நாதன் லயன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பதிலாக ஆடம் ஸம்பாவும் (Adam Zampa) பில்லி ஸ்டேன்லேக்கும் (Billy Stanlake) வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனும் அணியி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் கடைசி போட்டியில் வென்று தொடரையும் வெல்ல ஆஸ்திரேலிய அணி தயாராகி வருகிறது.

Exit mobile version