ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மக்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி ஆஸ்திரேலிய பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது வாழ்த்துக்களுடன் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் வணக்கம் என்பதை இந்தியில் கூறி தனது வாழ்த்தினை தொடங்கும் ஸ்காட் மோரிசன், தீப ஒளி திருநாளை, தாம் எப்போதும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொருவரோடு பகிர்ந்து கொள்ளும் மதிப்பையும், நம்பிக்கையையும் கொண்டாடுவதால், தீப ஒளித் திருநாளை தாம் எப்போதும் விரும்புவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்காட் மோரிசன் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version