ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிஆட்டத்தில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கிய 108 வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் உலகின் 2 ஆம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், 5 நிலை வீரரும் ஆஸ்திரியாவை சேர்ந்தவருமான டொமினிக் தீமை எதிர்கொண்டார். முதல் செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் வென்ற ஜோகோவிச், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 4க்கு 6, 2க்கு 6 என்ற கணக்கில் இழந்தார். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் 4வது செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் வென்றார். இரு வீரர்களும் ஆட்டத்தில் சம பலம் காட்டியதால், இறுதி செட்டில் அனல் பறந்தது. இந்நிலையில் ஜோகோவிச் இறுதி செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் வென்றார். இறுதியில் 6க்கு 4, 4க்கு 6, 2க்கு 6, 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.