ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவை (Amanda Anisimova) வீழ்த்திய செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா(Petra Kvitova), முதல் நபராக காலிறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4 ஆம் சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவாவை (Amanda Anisimova) எதிர்கொண்ட 8 ஆம் நிலை விராங்கனையான செக் குடியரசின் பெட்ரா கிவிடோவா(Petra Kvitova) 6 க்கு 2, 6 க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.
இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறினார். நடப்பு தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் போட்டியாளர் கிவிடோவா என்பது குறிப்பிடத்தக்கது.