காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய தூதர் ஆதரவு

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் ஹரிந்தர் சித்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் அரசியலாக்கி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவை தவிர மற்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை ஆஸ்திரேலியா ஆதரிக்கும் என இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் ஹரிந்தர் சித்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மதிப்பதாக கூறிய அவர், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Exit mobile version