ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பெட்ரா கவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டானியெல்லே ரோஸ் காலின்ஸை வீழ்த்தி செக் குடியரசின் பெட்ரா கவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுப்போட்டியில் தர வரிசையில் 8ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா கவிடோவா அமெரிக்காவின் டானியெல்லே ரோஸ் காலின்ஸை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடந்த இப்போட்டியில், 7 க்கு 6, 6 க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் காலின்ஸை வீழ்த்தி பெட்ரா கவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Exit mobile version