ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : அரையிறுதியில் கீரீஸின் சிட்சிபஸ்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் ராபர்டோ பவுடிஸ்டா அகட்டை (Roberto Bautista Agut) வீழ்த்திய கீரீஸின் சிட்சிபஸ் (Tsitsipas) முதல் போட்டியாளராக அரையிறுதிக்குள் நுழைந்தார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின், காலிறுதியில் பிரபல வீரர்களான கீரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபஸ்ஸூம் (Stefanos Tsitsipas) ஸ்பெயினின் ராபர்டோ பவுடிஸ்டா அகட்டும் (Roberto Bautista Agut) மோதினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், இருவரும் அடுத்தடுத்த செட்டை கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தினர். 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், கிரீஸின் சிட்சிபஸ் 7 க்கு 5, 4 க்கு 6, 6 க்கு 4, 7 க்கு 6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பவுடிஸ்டா அகட்டை வீழ்த்தி ஆண்கள் பிரிவில் முதல் போட்டியாளராக அரையிறுதிக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றில், கனடாவின் காப்ரிலா டப்ரோவ்ஸ்கி (Gabriela Dabrowskki), மேட் பவிக் (Mate Pavic) இணை, சீன தைபேவின் ஹவ் ச்சிங் ச்சான் (Hao Ching Chan), ஜீன் ஜூலியன் ரோஜர் (Jean Julien Roger) இணையை 6 க்கு 4, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியது.

பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில், செக் குடியரசை சேர்ந்த கேத்ரின சினியாகோவா, பர்போரா க்ரெஜ்சொகோவா இணையை, எதிர்கொண்ட சீனாவின் ஷூவாய் ஸாங், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர் இணை 7 க்கு 6, 7 க்கு 6 என்ற நேர் செட் கனக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

Exit mobile version