ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 359 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 179 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 67 ரன்களிக் சுருண்டதை அடுத்து அந்த அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால், 112 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, மார்னஸ் அடித்த 80 ரன்கள் உதவியுடன் 246 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ் 7 ரன்னிலும், ஜாசன் ராய் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதன் பின்னர் கேப்டன் ஜோ ரூட்டும், ஜோ டென்லியும் அணியை சரிவில் இருந்து மீட்ட நிலையில், ஜோ டென்லி 50 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
3 வது நாள் ஆட்டநேர முடிவில், 70 ஓவர்களில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 75 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Exit mobile version