உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது
லண்டனில் நடைபெற்ற இவ் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 153 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் உதானா, டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கருரத்னே, குசல் பெரேரா நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்த போதும் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறியதால் 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை மட்டுமே இலங்கை எடுத்தது. இதையடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆரோன் பின்ச் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.