ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோரி பர்ன்ஸ், கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் நிதானமாக ஆடி 2-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர். பர்ன்ஸ் 47 ரன்களிலும், ஜோ ரூட் 57 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜோஸ் பட்லர் மட்டும் நிதானமாக ஆடி ரன்களை சேகரித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது.

Exit mobile version