ஆஸி. ஓபன் டென்னிஸ் – 7வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டியில் உலகின் முதல் தர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் மோதினார். இதில் 6 க்கு 3, 6 க்கு 2, 6 க்கு 3 என்ற நேர் செட்களில், முதல் நிலை வீரரான ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன்மூலம், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 7-வது முறையாக நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக, ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன் மற்றும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றுள்ளனர். இது ஜோகோவிச் பெறும் 15-வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டமாகும். சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்சிற்கு சுமார் ரூ. 29 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ரபேல் நடாலுக்கு சுமார் ரூ.14 புள்ளி 5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

Exit mobile version