அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் (Agusta Westland) ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தரகராக செயல்பட்ட மைக்கேல் கிறிஸ்டியனுக்கு சிபிஐ காவலை நீட்டித்து, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு அகஸ்டா வெஸ்ட்லாண்ட் (Agusta Westland) நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் இடைத்தரகராக செயல்பட்ட மைக்கேல் கிறிஸ்டியன் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் மூன்று இடைத் தரகர்களில் ஒருவரான கிறிஸ்டியன் மைக்கேல் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, காவலை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு விதிக்கப்பட்ட காவலை மேலும் 5 நட்கள் நீட்டித்து உத்தரவிட்டது.

 

Exit mobile version