திருச்சியில் கைத்தறி துணிகளுக்கான ஆடி சிறப்பு தள்ளுபடி கண்காட்சி

திருச்சியில் கைத்தறி துணிகளுக்கான ஆடி சிறப்பு தள்ளுபடி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் திருச்சியில், கைத்தறி துணிகளுக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனை கண்காட்சி 9 நாட்கள் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, திருப்பூர், கோயம்பத்தூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 45 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அசல் ஜரிகை திருபுவனம் பட்டு, மென் பட்டு, ஆரணி பட்டு, சேலம் பட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் பருத்தி ரக ஜவுளிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், பட்டு ரக ஜவுளிகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பட்டு ஜவுளிகளுக்கு 35 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version