திருச்செந்தூர் அருகேயுள்ள ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கொற்கை மன்னன் கால கட்டட எச்சங்கள் கிடைத்த நிலையில் தற்போது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓடுகள் கிடைத்துள்ளது.
ஜீவநதியான தாமிரபரணி ஆறு தற்போது போதிய மழையில்லாததால் நீரின்றி காணப்படுகிறது. திருச்செந்தூர், ஆத்தூர், உமரிக்காடு போன்ற பகுதிகளிலும் தாமிரபரணி ஆறு வறண்டு காணப்படுவதால் ஆற்றில் இருந்து கொற்கை மன்னன் கால கட்டிட தூண்கள் வெளியே தெரிய ஆரம்பித்தன. இந்த நிலையில் தற்போது 3ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளின் எச்சங்கள் கிடைத்துள்ளன. எனவே இப்பகுதியை தொல்லியல் துறை முறையாக அகழ்வாராய்ச்சி செய்து தமிழனின் பண்டைய வரலாறு மற்றும் நாகரீகத்தை கண்டறிய வேண்டும் என தொல்லியல் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.