ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, நந்தியால் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அனில் என்பவர், பூச்சிமருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை முயற்சிக்கு முன்பு செல்போன் மூலம் அவர் அளிக்கும் வாக்குமூலம் மற்றும் பூச்சிமருந்தை குடிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
நீதிமன்றம் முன் மயங்கிய நிலையில் கிடந்தவரை, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நந்தியால் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.