புதுச்சேரியில் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முயற்சி

புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மணிமாறன் என்பவர் தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியில் தொழிற்சங்க தலைவரான மணிமாறன், போராளிக் குழு என்ற அமைப்பை நடத்தி வரும் சுந்தர் என்பவர் தனது சொந்த தகவல்களை எடுத்து வைத்து கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தொடர்ந்து மிரட்டுவதாகவும், தகவல்களை வெளியிடமால் இருக்க பணம் கேட்டு மிரட்டுவதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமையகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அருகில் இருந்த காவல்துறையினர் காப்பாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version