காஷ்மீர் விவகாரத்தில் கூட்டணி கட்சியினர் மீதே தாக்குதல் பேச்சு – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். அப்போது காஷ்மீரில் தற்போது அமைதி நிலவினாலும் விரைவில் கலவரம் வரும் என்னும் வகையில் புயலுக்கு முன் அமைதியை போல, அங்கு நிச்சயம் ஒரு எரிமலை வெடிக்கும் என குழப்பத்தை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும், மக்களவை மற்றும் மநிலங்களவையில் காஷ்மீர் விவகாரத்தில் ஓட்டுப் போடாமல் காங்கிரஸ் கட்சியினர் பணம் வாங்கி கொண்டு ஓடிப்போனர்களா என சொந்த கூட்டணி கட்சியினரையே விமர்சித்து, கூட்டணி கட்சியினரின் வெறுப்பை சம்பதித்துள்ளார். மேலும், காஷ்மீரில் எந்த ஒரு முஸ்லிம் யாரை தாக்கினாலும், இந்திய முழுவதும் உள்ள முஸ்லீம்கள் தாக்கப்படுவார்கள் என மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். வைகோவின் இந்த சர்ச்சை பேச்சால் பலத்தரப்பட்ட மக்கள் அதிருப்திக்குள்ளகியுள்ளனர்.

Exit mobile version