வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

தேர்தல்களில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஆதார் எண் அவசியம் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அட்டையை, ஆதாருடன் இணைப்பது அவரவர் விருப்பம் என்ற அளவிலேயே உள்ளது. இவ்விசயத்தில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், இதுவரையில், 32 கோடி ஆதார் எண்கள், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில், கள்ள ஓட்டுப் போடுவது உள்ளிட்ட முறைகேடுகளை களைவதற்கு ஆதார் எண் இணைப்பு அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950ல், திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

Exit mobile version