வருமான வரி செலுத்த PAN எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வருமான வரி செலுத்த PAN எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் இல்லை என சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கு விளக்கம் கேட்டு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பு வாதத்தை கேட்டு, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை பரிசீலித்த நீதிபதிகள், வருமான வரி செலுத்த PAN எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டனர்.