வெப்பச் சலனம் காரணமாக நாகை, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளையும், நாளை மறுநாளும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களீல் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், கடலோர மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், ராமநாதபுரம்,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.