ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்தவரிடம் நூதன முறையில் திருட்டு

பொன்னமராவதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ATMல் பணம் எடுக்க வந்தவரிடம் நூதன முறையில் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நல்லூரைச் சேர்ந்தவர் முருகையா. இவர் பொன்னமராவதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்-ல் தனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் இயந்திரம் அருகில் இருந்த ஒருவர் உதவி செய்வது போல் நடித்து, அவரிடமிருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கிக் கொண்டு, ரகசிய எண்ணையும் தெரிந்து கொண்டு, அதே போன்று வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்திலேயே முருகையாவின் வங்கிக் கணக்கில் இருந்த 5,800 ரூபாய் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. புகாரையடுத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொன்னமராவதி காவல்துறையினர், விசாரித்து வருகின்றனர். மேலும் வங்கி ATM இயந்திரத்தில் பாதுகாப்பு பணியில் கடந்த மூன்று தினங்களாக யாருமே இல்லாததே, இந்த நூதன திருட்டிற்க்கு காரணம் என கூறப்படுகிறது.

Exit mobile version