விருதுநகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து

விருதுநகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் தீப்பற்றி எரிந்ததால் பணம் இருந்த இயந்திரம் முற்றிலும் சேதமடைந்தது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை – மதுரை சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் மின் கசிவு காரணமாக இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பணம் வைக்கப்பட்டிருந்த இயந்திரம் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version