`எனக்கு ஒன்றும் தெரியாது; இவங்க தான் 1 லட்ச ரூபாய் தரேன் சொன்னாங்க!’ – ஏடிஎம் கொள்ளை வழக்கில் அதிர்ச்சி தகவல்

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி தமிழ்நாடு அழைத்துவரப்பட்டதாக வீரேந்திர ராவத், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி.ஐ. ஏடிஎம்-ல் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் நூதன முறையில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத், நஜிம் உசேன் ஆகியோரை ஹரியானாவில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான வீரேந்திர ராவத்தை 4 நாள் காவலில் எடுத்த போலீசார், 2-வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தனக்கு ஏ.டி.எம். இயந்திரங்களில் உள்ள தொழில்நுட்பங்கள் பற்றி எதுவும் தெரியாது என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்காக மட்டுமே தன்னை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக, ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அமீர் அர்ஷ் தன்னிடம் பேரம் பேசியதாகவும் வீரேந்திர ராவத் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Exit mobile version