கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் முழுக்கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக ஆத்துப்பாளையம் அணைகட்டிற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் 625 ஏக்கர் பரப்பளவு கொண்ட அணைக்கட்டில் 410 ஏக்கர் நீர் பரப்பு நிரம்பியது. 26 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியது. 235 மில்லியன் கனஅடி தண்ணீர், நீர் தேக்கத்தில் உள்ளது. இதனால், கரூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 19 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post