உதகை விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலை மேலிடப் பயிற்சி மையமாக உள்ள, உதகை எச்.ஏ.டி.பி., மைதானம், தடகளம் மற்றும் கால்பந்து விளையாட்டுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த மைதான ஓடு தளத்தில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் 7 கோடியே 30 லட்சம் செலவில் சிந்தடிக் ஓடுதளம் தரம் உயர்த்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 400 மீட்டர் ஓடுதளத்தில் 6 பேர் பங்கு பெறும் வகையில் இந்த சிந்தடிக் ஓடுதளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றும் இந்த பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.