அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: உயர்நீதி மன்றம் திட்டவட்டம்

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் அறிவித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கில் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்கை ஏற்கமுடியாது என கூறி மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக நீதிபதிகள் எச்சரித்தனர். தரிசனத்தை நீட்டிக்க கோரி பொது நல வழக்காக தான் தாக்கல் செய்ய முடியும் என்று அவர்கள்தெரிவித்தனர். இதையடுத்து, மனு திரும்ப பெறப் பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Exit mobile version