43ஆவது நாளான இன்று கரும்பச்சை நிறப்பட்டாடையில் அத்திவரதர் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது. முதலில் சயனக் கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இப்போது நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 43ஆவது நாளான இன்று அத்திவரதர் கரும்பச்சை நிறப் பட்டாடை உடுத்துக் காட்சியளிக்கிறார். ஏலக்காய், அத்திப்பழம், பாதாம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிரீடமும், பஞ்சவர்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையும் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. காலை ஐந்துமணி முதல் வழிபாடு தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வழிபட்டு வருகின்றனர். வரும் வெள்ளிக்கிழமையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடையும் என்பதால் நாள்தோறும் லட்சத்துக்கு மேற்பட்டோர் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இதுவரை எண்பது லட்சத்துக்கு மேற்பட்டோர் வழிபட்டுச் சென்றுள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Exit mobile version