புதிய உச்சத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 168 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி 24 கேரட் தங்கம் கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 276 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 72 ரூபாய்க்கும், சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 52 ரூபாய் 40 பைசாவுக்கும், கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version