புதிய துணை மின் நிலையத்தில் சோதனை ஓட்டத்தை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

இப்பகுதி பொதுமக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மக்களின் கோரிக்கையை ஏற்று 10 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின்நிலையத்தின் மூலம் 11 கிராம மக்களுக்கு தங்குத் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும். இந்த நிலையில், துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பாண்டுக்குள் 130 துணை மின்நிலையங்கள் தொடங்கப்படும் என்றும், போதிய மின் உற்பத்தி இருப்பதால், கோடை காலத்தில் மின் தடை ஏற்பட வாய்பே இல்லை எனவும் தெரிவித்தார்.

Exit mobile version