மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 510 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் 8 ஆயிரத்து 143 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து காலை நிலவரப்படி 7 ஆயிரத்து 510 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ம் தேதி 100 அடியை எட்டிய மேட்டூர் அணை, செப்டம்பர் மாதம் 7ம் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து 100 நாட்களை தாண்டி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியில் நீடித்து வருகிறது.

Exit mobile version