அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை காக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அவர், தமிழகத்தின் உரிமை நிலைநாட்ட அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி குறித்து கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் கேள்விக்கு, பேரவையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ருசிகரமாக விளக்கம் அளித்தார். 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட் நிஜமா, நிழலா என்பது குறித்த விவாதத்தின் போது பேசிய அவர், நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்து வருவதால் தான் மக்கள் தொடர்ந்து அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி வருவதாக கூறினார்.
தமிழகத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் உள்ள விதி மீறிய கட்டடங்கள் விரைவில் நெறிப்படுத்தப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.