எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா; முதல்வர், துணை முதல்வர் மரியாதை

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதிமுக தலைமையகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

இதை தொடர்ந்து, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Exit mobile version