5 வயதில் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை படைத்த சிறுமி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சப்படி என்னும் கிராமத்தில் தையற் தொழில் செய்து வருபவர் பவித்ராமன்,.. இவர் அழிந்து வரும் சிலம்ப கலையை உயிர்பிக்க வேண்டுமென்கிற நோக்கத்துடன் தான் கற்ற கலையை பள்ளி மாணவர்களுக்கு பகுதி நேரமாக கற்பித்து வருகிறார்.

பவித்ராமன் – அனிதா ஆகிய தம்பதிகளின் மூத்த மகள் ஸ்வேதாஸ்ரீ. 5 வயதாகும் போதே , ஸ்வேதாஸ்ரீ தன் தந்தையை பார்த்து சிலம்பம் சுற்ற ஆரம்பித்துள்ளார்.இதையடுத்து தன் பயிற்சி பட்டறைக்கு, தினமும் ஸ்வேதாஸ்ரீயை பவித்ராமன் அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு ஸ்வேதாஸ்ரீக்கு பயிற்சி அளிக்க தொடங்கிய பவித்ராமன், தன்னிடம் பயிலும் மாணவர்கள் பிற இடங்களில் பங்கேற்கும் போட்டிகளில் ஸ்வேதா
ஸ்ரீ யையும் பங்கேற்க வைத்துள்ளார். ஸ்வேதா ஸ்ரீ சிலம்பாட்டத்தை கற்க தொடங்கிய சில மாதங்களிலேயே நன்கு தேறியவராக மாறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடமும், ஈரோட்டில் நடைப்பெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடமும், கோவா மற்றும் சேலம் ஆகிய இடங்களில் நடைப்பெற்ற உலக,தேசிய அளவிலான சிலம்ப போட்டிகளிலும் முதல் பரிசையும் வென்று பெற்றோருக்கே இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் ஸ்வேதா ஸ்ரீ..

இந்தாண்டு மார்ச் மாத தொடக்கத்தில் பயிற்சியை தொடங்கிய ஸ்வேதா ஸ்ரீ 8 மாதங்களுக்குள்ளாகவே பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற சிலம்ப போட்டிகளில் கலந்துக்கொண்டு முதல்பரிசை பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.சிலம்ப போட்டிகளில மட்டும் இல்லாமல், படிப்பிலும் சுட்டியாகவும் ஸ்வேதா ஸ்ரீ இருந்து வருகிறார்.

சிலம்பாட்டத்தில் சிறுவயதினருக்கான உலக சாதனையாளர் பட்டியலில் ஸ்வேதா ஸ்ரீ பெயரை சேர்க்க பவித்ராமன் விண்ணப்பித்துள்ளார்.

கடந்த மாதம் நேரில் பார்வையிட்டு ஸ்வேதா ஸ்ரீயின் சிலம்பாட்டத்தை ரசித்த ” BRAVO இன்டர்நேஷ்னல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்” புத்தகம் ஸ்வேதா ஸ்ரீயை இளம் வயது சாதனையாளராக அங்கீகரித்தது. இந்த சாதனை சான்றிதழுடன் ஸ்வேதா ஸ்ரீ பெற்றோர் உடன் கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார்.

Exit mobile version