107 ஆவது வயதிலும் தன்னம்பிக்கையோடு வாழும் மூதாட்டி

தன்னம்பிக்கையுடன் 107 வயதை தாண்டியும் தனியாக வாழ்ந்து வரும் மூதாட்டி தான் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறுகிறார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள மேல்புளியங்குடி கிராமத்தில் வாழ்ந்து வரும் மூதாட்டி தையல் நாயகி. இவர் 107 வயது ஆகியும் தன்னம்பிக்கை தளராமல் வாழ்ந்து வருகிறார். உறவுகள் யாரும் அருகில் இல்லை என்றாலும் தன்னுடைய அன்றாட வேலைகளை அவரே செய்து கொள்கிறார். தினமும் காலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார், இவருடைய உணவுப் பழக்க வழக்கங்கள் இவரை ஆரோக்கியத்துடன் வைத்துள்ளது. அன்றாட பொழுதுபோக்காக தினமும் கீற்று பின்னுதலை அவர் செய்து வருகிறார்.

Exit mobile version