105 வயதில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி

கேரளாவில் 105 வயதுடைய பகீரதி அம்மா என்கிற மூதாட்டி. நான்காம் வகுப்பு தேர்வு எழுதி கல்விக்கு வயது தடை இல்லை என்று நிருபித்துள்ளார்.

பகீரதி அம்மா சின்ன வயதில் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய அம்மா அவரை விட்டு இறந்துவிட்டார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் படிப்புக்கு இடம் இல்லாமல் போகிவிட்டது. ஆனாலும், படிக்க முயற்சி செய்து வந்தார். கடைசியில் சில நாட்களில் கல்யாணம் முடிந்தது. அதன் பிறகு 6 குழந்தைகள் என வாழ்ந்து வந்துள்ளார். பின் அவருடைய கணவரும் இறந்து போக ஆறு குழந்தைகளையும் தனி மனுஷியாக படிக்க வைத்து வளர்த்துள்ளார்.

பின்பு , அவர்களுடைய பிள்ளைகள் அவருடைய ஆசை என்ன என்று கேட்ட போது நின்று போன தன் படிப்பைத் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.

பகீரதி அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நான்காம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார். அப்போது அவருக்கு உதவிய வசந்த குமார் என்பவர் “100 வயதைக் கடந்தாலும் அவருடைய ஞாபகத் திறனும், கண் பார்வையும் மிகத் தெளிவாக உள்ளது. அவரே தேர்வு எழுதினார். இடையே முடியாத போது அவரின் கடைசி மகள் தான் உதவினார். கடினமாக இருந்தாலும் எப்படியோ சுற்றுச்சூழல் , கணிதம், மலையாளம் என மூன்று தேர்வுகளையும் எழுதி முடித்துள்ளார் ” என்று தெரிவித்தார்.

அவரை மீண்டும் படிக்க வைத்து ஆசையை நிறைவேற்ற கேரள மாநில எழுத்தறிவு மிஷனில் இணைத்துள்ளனர். இந்த மிஷன் வயதானவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க கேரள அரசு உருவாக்கிய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version