தற்போது 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது வரை 22 தொகுதிகள் காலியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்து. இதில் சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர், கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் சூலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்ததாதாக தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. எனவே இதனால் தற்போது 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version