தேசிய லோக் அதாலத்தில் 2 லட்சம் வழக்குகள் பரிசீலனை

லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் மொத்தமாக வழக்குகளை பரிசீலித்து, உடனடியாக தீர்வு காணும் வகையில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.

இதில் தற்போது வரை 58 கோடி ரூபாய் மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டது.

ஏற்கனவே நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1 லட்சத்து 68 ஆயிரம் வழக்குகளும், நீதிமன்றத்திற்கு வராமல் நிலுவையில் உள்ள 79 ஆயிரத்து 87 வழக்குகளும் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 605 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

 

 

Exit mobile version