9 வயதில் இசைக்கலையில் சாதனை படைத்து வரும் சிறுமி

இசை உலகை தன் இசையால் அதிர வைப்பதோடு , தனி நபர் யூடியூப் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் 9 வயது சிறுமி ஒருவர். யார் அந்த சிறுமி அவரைப்பற்றி விரிவாக காண்போம் இந்த சிறப்பு தொகுப்பில்…

இசையை நேசிக்கும் அனைவருக்கும் இசை கருவி வாசிக்கும் கலை அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை .
இருப்பினும் இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை என்றுதான் கூறவேண்டும், சோகம், தூக்கம் இரண்டிலும் முதலில் இடம்பெறுவது இசைதான். அப்படிப்பட்ட இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டு இசை உலகையே அதிர வைத்து வருகிறார் 9 வயது  சிறுமி ஒருவர்.

இங்கிலாந்து உள்ள இப்ஸ்விச் பகுதியை சார்ந்தவர் நண்டி ப்யுசேல். இவர் குழந்தை பருவத்தில் இருந்தே இசை மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இவரின் ஆர்வத்திற்க்கு இவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளனர் அவரின் ஊக்கத்திற்க்கு ஏற்றாற்போல ஏதாவது ஒரு இசை கருவியை கையில் எடுத்து அதில் கவனம் செலுத்த நினைத்தார் நண்டி. அதன்படி சிறு வயதிலையே ட்ரம்ஸ் கருவி மீது அதிக ஆர்வம் கொண்டு அதனை முழுமையாக கற்று வந்தார்.

ஐந்து வயதில் மேடைகளில் ஏறி ட்ரம்ஸ் வாசிக்க துவங்கிய நண்டிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு, ட்ரம்ஸ் வாசிக்க துவங்கும் முன் இருக்கக்கூடிய சுறுசுறுப்பும் பரப்பரப்பும் நண்டியிடம் இறுதிவரைக் காணப்படுவது கூடுதல் சிறப்பு. மேலும் ட்ரம்ஸ் வாசிக்கும் போது இவர் தன்னிலை மறந்து இசையில் முழ்கி , இசைக்கு ஏற்றவாறு பாவனை செய்வது பலரின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

நண்டி சிறு வயதில் இசை உலகில் தடம் பதித்துள்ளார் என்றால் அது மிகையாகாது. எனென்றால் பள்ளி படிப்பை கவனித்துக் கொண்டு பகுதி நேரமாக விளம்பரங்களிலும் நடித்துக்கொண்டிருக்கும் அவர் இசை கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், தனக்கு உள்ள ரசிகர் பட்டாளத்தை மகிழ்விக்கும் விதமாக தனி நபர் யூடியூப் சேனல் ஒன்றினை துவங்கி அதில் இவர் வாசிக்கும் ட்ரம்ஸ் இசையை பதிவேற்றி மில்லியன் பேரின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இசை உலகில் ட்ரம்ஸ் என்றாலே இவரின் பெயரைதான் பலரும் குறிப்பிடுகின்றனர். அந்த அளவிற்க்கு இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது.  பிரபலங்கள் பலரும் செல்பி எடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ள இவர் வளர்ந்து வரும் பிரபலங்கள் பட்டியலில்  ஒருவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version