சிறப்பான சம்பவத்துக்கு ரெடியாகுங்கள்- “அசுரன்” ட்ரெய்லர் இன்று ரிலீஸ்

பொல்லாதவன்,ஆடுகளம்,வடசென்னை படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ்- இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் “அசுரன்”. தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படமானது சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் பூமணியின் “வெக்கை” நாவலை அடிப்படையாக கொண்டது.

இரட்டை வேடங்களில் நடிக்கும் தனுஷ்க்கு ஜோடியாக மஞ்சு வாரியர்,அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படமானது அக்டோபர் 4ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அசுரன் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.20 மணியளவில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து #AsuranTrailerFromToday என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

 

Exit mobile version