சூடு பிடிக்கும் மத்திய பிரதேச சட்டபேரவை தேர்தல்

மத்தியபிரதேச மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளநிலையில் பாஜக தலைவர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. இந்தமுறை எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. கடைசி நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் அது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.

இதனிடையே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்கள் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தநிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிய உள்ளநிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதேபோல் பிற கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரம் செய்ய இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

 

Exit mobile version