4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்: 152 மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்பு

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 152 மனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முந்தினம் நிறைவு பெற்றது. வேட்பு மனு மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் தாக்கல் செய்யப்பட்ட 256 மனுக்களில் 152 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 104 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சூலூர் தொகுதியில் 22 வேட்பு மனுக்களும், அரவக்குறிச்சியில் 68, திருப்பரங்குன்றத்தில் 44, ஒட்டப்பிடாரத்தில் 18 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெறலாம். அன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

Exit mobile version