ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்த அசாம் இளைஞர் கைது

பொள்ளாச்சியில் சிறார்களின் ஆபாச படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்த அசாம் மாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை சமூக ஊடகவியல் காவல்துறையினர் வலைதளங்களை கண்காணித்த போது, ரெண்தா பாசுமாடரி என்ற அசாம் மாநில இளைஞர் முகநூலில் சிறார்களின் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சமூக ஊடகவியல் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர், ரெண்தா பாசுமாடரியை கைது செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அவரது செல்போனில் சிறார்களின் ஆபாச படங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ரெண்தா பாசுமாடரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version