தேசிய குடிமக்கள் பதிவு வரைவு இறுதி பட்டியலை வெளியிட ஆக.31 வரை அவகாசம் நீட்டிப்பு

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு இறுதி பட்டியலை வெளியிட ஆகஸ்ட் 31ம் தேதி வரை கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் உண்மையான இந்தியர்கள் யார் என்பதை கண்டறிய என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், முழுமையாக ஆய்வு செய்து தேசிய குடிமக்கள் பதிவு வரைவு இறுதி பட்டியலை வெளியிட கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, அசாம் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவுபட்டியல் மறுவரையறை செய்யப்பட்டு வருவதால், முழுமையாக முடிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து ஆகஸ்ட் 31-ம் தேதிவரை அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version