53 வினாடியில் 35 மாநில தலைநகரங்களை சொல்லி அசத்தும் சிறுவன்

சென்னை திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவன், 53 வினாடிகளில் 35 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை சொல்லி அசத்தி வருகிறார்.

நூம்பல் பகுதியைச் சேர்ந்த டெனிதா என்பவரின் மகனான ஜெரேமியா டெனி, 35 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை சரளமாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளான். தினமும், தன் மகன் ஜெரேமியா டெனிக்கு, டெனிதா மாநிலங்களின் தலைநகரங்களை சொல்லி கொடுத்து வந்துள்ளார். நாளடைவில் சிறுவன் ஜெரேமியா டெனி சரளமாக கூறுவதைக் கண்ட டெனிதா, கின்னஸ் சாதனை முயற்சிக்கு விண்ணபித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற, கலாம் விசன் 2020 என்ற சாதனை நிகழ்ச்சியில் சிறுவன் ஜெரேமியா டெனி கலந்து கொண்டு 53 வினாடிகளில் 35 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை கூறி அசத்தியுள்ளார். இதற்கு முன்பு 1.40 வினாடிகளில் 35 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை மூன்றரை வயது சிறுவன் கூறி இருந்ததே சாதனையாக உள்ளது.

Exit mobile version