பிரம்மபுத்திரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள ஆசியாவின் மிக நீளமான ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து, 4 புள்ளி 94 கிலோ மீட்டர் நீளத்தில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்திற்காக ஈரடுக்கு போகிபீல் பாலம் கட்டப்பட்டுள்ளது. திப்ருகாரில் 5 ஆயிரத்து 920 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் நீண்ட பாலம் ஆகும். 1997ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் தேவே கவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. பாலத்தின் கீழ் தளத்தில் இருவழி ரயில் பாதையும், மேல்தளத்தில் 3 வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கான பணிகள் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நிறைவடைந்தன. 2002ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பாலத்தை அவரது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்து நாட்டிற்கு அற்பணித்தார். பின்னர் பிரதமர் மோடி காரில் சென்று ஈரடுக்கு பாலத்தை பார்வையிட்டார்.