தரமணியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை கருவி மற்றும் முழு உடலை பரிசோதனை செய்யும் சிடி.ஸ்கேன் கருவி தொடங்கி வைக்கப்பட்டது
பல்வேறு புற்று நோய்களுக்கு கொடுக்கப்படும் புரோட்டான் தெரப்பி எனப்படும் அதிநவீன கதிரியக்க சிகிச்சைகான கருவியும், தெற்கு ஆசியாவின் முதல் முழு உடல் சிடி ஸ்கேன் கருவியும், தரமணி அப்பல்லோ மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி பங்கேற்று அவற்றை தொடங்கி வைத்தார். உடற் பயிற்சியோடு முழு உடல் பரிசோதனையும் செய்வதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம்,புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை தடுக்க முடியும் என்று டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.