ஆசிய அளவிலான யோகா போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்க்கு தாயகத்தில் உற்சாக வரவேற்பு

ஆசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகம் திரும்பிய தர்மதேஜாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த வீரர் தர்மதேஜா பங்கேற்று 2 தங்கப்பதக்கமும் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றார். பதக்கங்களைப் பெற்றுத் தாயகம் திரும்பிய தர்மதேஜாவுக்குச் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் அவரது பெற்றோரும், நண்பர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு பள்ளிகளில் உள்ள திறமை வாய்ந்த யோகா மாணவர்களைத் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என வீரர் தர்மதேஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version